சுமித்ரா மகாஜன் இல்லத்தில் மகளிர் தின விழா நடனமாடி கொண்டாடி மகிழ்ந்த பெண் எம்.பிக்கள்.

263

மாநிலங்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இந்த மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள அனைத்து நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக எம்.பி. பூனம் மஹாஜன், காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ், ரூபா கங்குலி, ஹேம மாலினி மற்றும் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 50 பெண் எம்.பிக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பெண் எம்.பி.க்களுடன் சேர்ந்து சுமித்ரா மகாஹனும் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.