மதுரை ஆவின் பால் பண்ணை சார்பில், புதிய ஐஸ்கிரீம் உற்பத்தி ஆலை திறப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

256

மதுரை ஆவின் பால் பண்ணை சார்பில், புதிய ஐஸ்கிரீம் உற்பத்தி ஆலை திறப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.
மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பாக ஆவின் பால் பண்ணை இயங்கி வருகின்றது. 2016-ஆம் ஆண்டில் சுமார் 56 கோடி மதிப்பில் ஐஸ்கிரீம் ஆலை தொடங்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஐஸ்கிரீம் ஆலையுடன் சேர்த்து 40 கோடி மதிப்பில் நறுமணப்பால் உற்பத்தி ஆலையும் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்,கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.