மதுராந்தகம் அருகே பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

239

மதுராந்தகம் அருகே பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி, அதில் பயணம் செய்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த சர்மா, சுந்தராஜ்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ராஜேந்திரன் என்பவர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்குறித்து, அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.