மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கா விட்டால் பதவி விலக தயங்க மாட்டோம் என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

247

மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கா விட்டால் பதவி விலக தயங்க மாட்டோம் என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு மதுரை அருகேவுள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதற்கு மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பரங்குன்றம் அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏ ஏ.கே.போஸ், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்தார். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனையை இங்கு அமைக்காவிட்டால், மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி விலகுவோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.