உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை….

318

உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
எபனேசர் சார்லஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். பொது இடங்கள், சாலைகளில் அனுமதி பெறாமல் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்தப்படுவதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாவதாக அவர் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சார்லஸ் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் கொண்ட அமர்வு சாலை மற்றும் பொது இடங்களில் முன்அனுமதி இல்லாமல் கூட்டம், போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.