மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்ற…

480

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழக அரசின் ஆணையை எதிர்த்து கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் 85 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தடையில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலை தொடரும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.