தடையை மீறி வேலை நிறுத்ததில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம்-உயர்நீதிமன்ற மதுரை கிளை

383

தடையை மீறி வேலை நிறுத்ததில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால், பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக, மதுரை சேர்ந்த சேகரன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் ஆகியோர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என அறிவறுத்தி இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தடையை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.