மதுரையில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக விமானநிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

268

மதுரையில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக விமானநிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கன மழை பெய்தது. கன மழைக் காரணமாக வில்லாபுரம் பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கன மழையால் நீர் தேங்கி நின்றதால், மதுரை விமான நிலையத்தின் சுற்றுச் சுவர் சுமார் 50 அடி தூரத்திற்கு இடிந்து விழுந்தது. அங்கு மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.