மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை இன்று தொடங்குகிறார்..!

493

மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை இன்று தொடங்குகிறார்.தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் மலைப்பகுதியில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை தமிழகத்தில் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி, விழிப்புணர்வு நடைபயணத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.அதன்படி, மதுரை பழங்காநத்தம் பகுதியில் இன்று தொடங்கும் வைகோவின் நடைப்பயணத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். மதுரையில் இன்று தொடங்கும் வைகோவின் நடைப்பயணம், பத்து நாட்களுக்குப்பின், சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் சென்றதை அடுத்து, கம்பம் பகுதியில் நிறைவடைகிறது.