தமிழகத்தில் நிதிநிலை நெருக்கடி இல்லை எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்..!

353

தமிழகத்தில் நிதிநிலை நெருக்கடி இருப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.மதுரை திருப்பரங்குன்றத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு 8 பவுன் தங்க சங்கிலியை அவர் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், ஜெயலலிதா காட்டிய வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்வதாக தெரிவித்தார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்று கூறிய உதயகுமார், இந்த திட்டத்தின் மூலம் ஏழை பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் நிதி நிலை நெருக்கடி இருப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் உதயகுமார் புகார் கூறினார்.