மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இரட்டை ரயில் வழித் தடத்திற்கான ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட உள்ளதாக மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் தெரிவித்துள்ளார்

310

மதுரை மாவட்ட ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச் சீட்டு இயந்திரத்தை மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் அறிமுகப்படுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இரட்டை ரயில் வழித் தடத்திற்கான ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டம் 3 வருட காலத்திற்குள் முடிவடையும் எனவும் இந்த விஷயத்தில் தமிழக அரசு மெத்தன போக்காக செயல்படுவதாகவும் கூறினார். மேலும் மதுரை முதல் போடி வரை செல்லும் அகல ரயில்பாதை திட்டத்தை வருவாய் அதிகம் கிடைக்காத காரணத்தினால் ரயில்வே துறை கிடப்பில் போட்டுள்ளது என்று தெரிவித்தார்.