பீரோவை உடைத்து 500 சவரன் நகை 8 லட்சம் பணம் கொள்ளை

123

மதுரையில் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 500 சவரன் தங்கநகை மற்றும் 8 லட்சம் ரூபாயை அடையாளம் தெரியாத சிலர் கொள்ளைடித்துச் சென்றனர்.

மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வைர வணிகர் தங்கவேலு என்பவர் காலை நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் அறையின் பீரோவின் பூட்டை உடைத்து அதில் இருந்த 500 சவரன் தங்கநகை மற்றும் 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். பிறகு தங்கவேலு வீட்டிற்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கீரைத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.