விமானத்தில் கடத்தி வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல்..!

753

மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து மதுரைக்கு வரும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விமானத்தின் உள்ளே இருந்த பார்சலில் நான்கு செல்போன்களில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கைப்பற்றிய அதிகாரிகள் அதனைக் கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.