யார் ஊழல்வாதிகள்? என்பது மக்களுக்கு தெரியும் – அமைச்சர் செல்லூர் ராஜு

1034

யார் ஊழல்வாதிகள்? என்பது எஜமான்களான மக்களுக்கு தெரியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முழுவதும் சுமார் 329 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். மதுரையில் உள்ள துவரிமான் கண்மாயை 50 லட்சம் ரூபாய் செலவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட உள்ளதாக செல்லூர் ராஜு கூறினார். மேட்டூர் அணை தூர் வாரியது போன்ற, வைகை அணையிலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று அவர் தெரிவித்தார்.