தூத்துக்குடி போராட்டக்காரர்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் வீடு மற்றும் அலுவலகத்தில், போலீசார் சோதனை..!

178

தூத்துக்குடி போராட்டக்காரர்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் வீடு மற்றும் அலுவலகத்தில், போலீசார் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சட்ட ஆலோசகராக வாஞ்சிநாதன் என்ற வழக்கறிஞர் செயல்பட்டார். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 10 தினங்களுக்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள வாஞ்சிநாதனின் வீடு மற்றும் அலுவலகத்தை, தூத்துக்குடி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான, 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதனிடையே வாஞ்சிநாதனை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறக்கோரியும், வழக்கறிஞர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.