ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !

174

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தால், கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 4வது நாளாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. கல்லணை, கோட்டைமேடு, வலசை, குறவன்குளம், காந்திகிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பெண்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பீட்டா அமைப்பை தடை வேண்டும் என கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொடர் போராட்டம் காரணமாக அலங்காநல்லூர் வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.