பட்டப்பகலில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞர் | சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

177

மதுரையில் பட்டப்பகலில் இளைஞரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தெற்கு மாட வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சதீஷை அரிவாளால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை உடனடியாக காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.