மணப்பாறை, மேலூரில் தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டு. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற இளைஞர்கள் உற்சாகம்.

153

மணப்பாறை அருகே வாடிவாசல் அமைத்து தடையை மீறி இளைஞர்கள் ஜல்லிக்கட்டை நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து உலகெங்கும் தமிழர்களின் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புறத்தாகுடியில் வாடி வாசல் அமைத்து 50க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு இளைஞர்கள் ஜல்லிக்கட்டை நடத்தினர். இதில் சீறி வரும் காளைகளை அடக்கி இளைஞர்கள் மகிழ்ந்தனர்.

மேலூரில் நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தினர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை 500க்கும் மேற்பட்ட நாம்தமிழர் கட்சியினர் நடத்தினர். 70க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி இளைஞர்கள் மகிழ்ந்தனர். அப்போது சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுக்கள் வழங்கப்பட்டது. இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் நீதிமன்றம் முன்பாக தடையை மீறி வழக்கறிஞர்கள் சேவல் சண்டையை நடத்தினர். அப்போது சேவல்களை போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது