மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரில் பார்வையிட்டார்..!

230

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரில் பார்வையிட்டார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், காளைகள் நிறுத்தப்படும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜல்லிக்கட்டுப் போட்டியை முறையாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், அனைத்துத் துறை அதிகாரிகளும் அப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.