அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

103

மதுரை அவனியா புரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் திருநாளையொட்டி ஆண்டு தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு நாள் அவனியா புரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கான முன்பதிவுகள் ர நடைபெற்று வருகிறது. முன்னதாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் போட்டி கண்காணிப்பு குழு தலைவர் ராகவன் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். மாடு பிடி வீரர்களுக்கான உடல் தகுதி பரிசோதனைகளும் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் மதுரை அவுனியாபுரத்தில் 13 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் போட்டியை காண வருபவர்களுக்கு தனித்தனியாக காலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாடு பிடி வீரர்கள் காயமடைந்தால் அவர்களுக்கு முதல் உதவி செய்வதற்கான குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருவார்கள் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.