அலங்காநல்லூர், மதுரையில் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அமைச்சர், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு ..!

396

அலங்காநல்லூர் அருகே பாலமேட்டில் வரும் 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி, டோக்கன்கள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு பகுதியில், வரும் 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகளின் உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று டோக்கன்களை பெற்று சென்றனர். இதேபோல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் டோக்கன்கள் பெற்றனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம் மற்றும் மருத்துறையின் உட்பட பலரும் பார்வையிட்டனர்.