தமிழில் மொழி பெயர்த்த விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறதா என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி..!

333

நீட் தேர்வு வினாக்களை தமிழில் மொழி பெயர்த்த விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறதா என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளுக்கான மொழி பெயர்ப்பில் குளறுபடி இருந்ததால் கருணை மதிப்பெண் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது ஆஜரான சிபிஎஸ்இ தரப்பு வழக்கறிஞர், சில கேள்விகளை தமிழில் மொழி பெயர்க்கும் போது தவறாகி விட்டதாக கூறினார். கேள்விகளுக்கான விடைகளை பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்கிறீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக கண்டித்தனர்.

பீகாரில் நீட் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றோர் அதிகமாக இருப்பது எப்படி என்றும் கேட்ட நீதிபதிகள், பிழையான வினாக்களுக்கு மதிப்பெண் கொடுக்காமல் எவ்வாறு தேர்வு முடிவை வெளியிட முடியும் என்று வினவினர். இதைத்தொடர்ந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.