விவசாயி தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழப்பு

84

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த எழுமலை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளச்சாமி. இவர் வழக்கம் போல் தனது தோட்டத்திற்கு சென்று வேலைகளை முடித்து விட்டு தோட்டத்து வீட்டிலேயே தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் வெள்ளச்சாமியை தேடி அவரது மகன் வேல்முருகன் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர் மர்மமான முறையில் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த எழுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த ராசக்குப்பம் பகுதியை சேர்ந்த தேமுதிக ஊராட்சி செயலாளர் செந்தில் குமார். இவர் நேற்று இரவு அதே பகுதியில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.