அரசியல்வாதிகள் தங்கள் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை : போக்குவரத்து துறை

258

வாகனங்களில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எந்த கொடிகளும் கட்டுவதற்கு வாகன சட்டத்தில் இடமில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சாலைகளை பராமரிக்க கோரும் வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசின் விதிகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்தனர். அதில் அரசியல்வாதிகள் தங்கள் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் தங்களது பதவிகளை பெரிதாக எழுதிக்கொள்ளவும் அனுமதியில்லை என்றும் போக்குவரத்து துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சாலைகளை முறையாக பராமரிக்கக்கோரும் வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்