மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து எதிர்காலத்தில் நடைபெறுவதை தடுக்க குழுவை அமைத்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவு..!

378

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எதிர்காலத்தில் தீவிபத்து ஏற்படுவதை தவிர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிழக்கு கோபுர வளாகத்தில் இருந்த 35க்கு மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவியது. இது போன்ற தீ விபத்து எதிர்காலத்தில் நடைபெறுவதை தடுக்க துறைகள் கொண்ட குழுவை அமைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.தீயணைப்பு, வருவாய், பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சியை சேர்ந்தவர்கள் குழுவில் இடம் பெற உள்ளனர்.மேலும் இந்த குழுவினர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என்றும் ஆய்வு செய்ய உள்ளனர்.