ஆளுநர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஆய்வு நடத்துவதில் எந்த தவறு இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு

336

ஆளுநர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஆய்வு நடத்துவதில் எந்த தவறு இல்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை வடக்கு மாசி வீதி சந்திப்பில், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் சார்பாக, அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள் என்றும், இதனால் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை என கூறினார்.

ஆளுநர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஆய்வு செய்வதில் தவறு இல்லை என்று தெரிவித்தார். மாநில உரிமைகளில் தலையிடாமல் ஆளுனர் பன்வாரிலால் செயல்படுவதாகவும் செல்லூர் ராஜு குறிப்பிட்டார். முதல்வராக வேண்டும் என்பற்காகவே மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றதாகவும், அவருடைய கனவு பலிக்காது என அவர் கூறினார்.