மதுரையில் கை விரல் கணுக்களை தரையில் ஊன்றி ஒரு நிமிடத்தில் 142 முறை தண்டால் எடுத்து பொறியியல் பட்டதாரி இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

248

மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி சுரேஷ். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே கராத்தே பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார். வித்தியாசமான முறையில் சாதிக்க விரும்பிய அவர், கை விரல் கணுக்களை தரையில் ஊன்றி தண்டால் எடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்படி கராத்தே பயிற்சியாளர்கள் சிவக்குமார், சுந்தரமூர்த்தி வழிகாட்டுதலின்படி, ஆசிய இறகுப்பந்து கிளப் செயலர் சரவணன் முன்னிலையில், இளைஞர் சதீஷ் 60 வினாடிகளில் 142 தண்டால் எடுத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ், கின்னஸ் சாதனைக்காக தண்டால் எடுக்கும் இந்த முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.