4-வது நாளாக மீனவர்கள் தொடர் போராட்டம் | சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் உடலை வாங்க மறுப்பு

264

இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் உடலை வாங்க மறுத்து, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேசுவரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, கடந்த 6-ந் தேதி, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். நியாயம் கிடைக்கும்வரை உயிரிழந்த பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதாக போராட்டக்காரர்கள், கூறி வருகின்றனர். வைகோ, திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் திரைப்பட பிரபலங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மீனவர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.