விமானத்தை ஓட்டும் உரிமம் பெற்ற முதல் பெண் விமானியாக மதுரையைச் சேர்ந்த காவியா சாதனை..!

370

பயணிகள் விமானத்தை ஓட்டும் உரிமம் பெற்ற முதல் பெண் விமானியாக மதுரையைச் சேர்ந்த காவியா சாதனை படைத்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருளப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார். அரசுப் பேருந்து ஓட்டுநரான இவரது மூத்த மகள் காவியா பெங்களூரில் உள்ள ஜக்கூர் அரசு விமான பைலட் மையத்தில் பயிற்சி பெற்றார். மத்திய அரசிடமிருந்து சிறப்பு உதவித் தொகை பெற்று தற்போது படிப்பை நிறைவு செய்துள்ள காவியா, 21 ஆண்டுகளுக்குப் பிறகு பைலட் உரிமம் பெற்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இன்று மதுரை வந்த அவரை உறவினர்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் சிறப்பாக வரவேற்றனர்.