மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டி, ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

261

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலியிறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், காலிறுதி போட்டி ஒன்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரிய வீரரான டோமினிக் தீமை எதிர்கொண்டார், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 3-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் டோமினிக் வெற்றி பெற்றார். முன்னணி வீரர் ரோஜர் பெடரரை வெளியேற்றிய அவர், இன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச்சை எதிர்த்து விளையாடுகிறார்.