ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ..!

858

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகர் தொகுதியில், திமுக சார்பில் மருது கணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆர்.கே.நகரில் தான் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனிடையே, இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட மதுசூதனன், பாலகங்கா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இதனால், வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே குழப்பம் நிலவியது.

இந்தநிலையில், ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆட்சிமன்ற நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.