மதுரவாயிலில் ரவுடி வெட்டிக் கொலை | கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்..!

356

மதுரவாயிலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயில் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர், சங்கர். அவர் ராஜூவ்காந்தி நகர் அருகே நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4பேர் கொண்ட கும்பல், சங்கரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதில் சதீஷ் என்பவருக்கும் சங்கருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகவும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சங்கரை வெட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசித்தேடி வருகின்றனர்.