தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடும் உத்தரவுக்கு எதிர்ப்பு !

372

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
சாலை விபத்துக்களில் ஏராளமானோர் உயிரிழப்பதற்கு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளே காரணம் என உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுக்கடைகளை அனைத்தையும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில் திருத்தம் செய்ய கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு இடங்களில் மாற்றி அமைக்கும் வகையில் நவம்பர் மாதம் வரை காலநீட்டிப்பு செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதேபோன்று, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்களில் சார்பிலும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.