ஆன்ட்ரிக்ஸ் – தேவதாஸ் நிறுவன முறைகேடு வழக்குத்தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

311

ஆன்ட்ரிக்ஸ் – தேவதாஸ் நிறுவன முறைகேடு வழக்குத்தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வணிகப்பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன், தனியார் நிறுவனமான தேவதாஸ் மல்டிமீடியாவுக்கு விதிகளை மீறி
குறைந்த விலையில் எஸ்-பாண்ட் அலைவரிசைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஒப்பந்த நடைமுறைகள் மற்றும் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட நான்கு பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும்,
ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.