மதம் மற்றும் வழிபாட்டு விவகாரத்தில் எந்த அரசாங்கத்திற்கும் தலையிட உரிமை கிடையாது என, மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

251

மதம் மற்றும் வழிபாட்டு விவகாரத்தில் எந்த அரசாங்கத்திற்கும் தலையிட உரிமை கிடையாது என, மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாகர்கோவிலை அடுத்த வடிவீஸ்வரத்தில் சுதந்திர தின இருச்சக்கர வாகன பேரணி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி நதிநீர் பிரச்சனைக்காக போரட்டங்கள் நடத்தும் ஒவ்வொரு தமிழருக்கும், ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சபரிமலையில் ஆண்டுதோறும் நடைதிறக்க வேண்டும் என்ற கேரள முதல்வரின் கருத்து குறித்து கேட்டபோது, மதம் மற்றும் வழிபாட்டு விவகாரத்தில் தலையிட எந்த அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது என அவர் குறிப்பிட்டார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.