சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்க்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

174

சமூக ஆர்வலர் பியூஸ்மானுஷ்க்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மற்ற இரண்டு பேருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், பியூஸ்மானுஷ்க்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து பியூஸ் மானுஷிக்கு ஜாமின் கேட்டு அவரது மனைவி மோனிகா சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஷேசசாயி முன்னிலையில் வந்தது. காலையில் விசாரணை நடத்தி மாலையில் தீர்ப்பு வழங்கிய நிதிபதி, சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அத்துடன் 3 வாரங்களுக்கு பியூஸ் மானுஷ் குற்றறவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். பியூஸ்மானுஷிற்கு கிடைத்த ஜாமீன் அவரது சமூக பணிக்கு கிடைத்த வெற்றி என்றும் மோனிகா மகிழச்சியுடன் தெரிவித்தார்.