மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

322

மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு மானியத்தின்கீழ் ஆண்டுதோறும் ஒரு குடும்பத்துக்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதற்குமேல் தேவைப்படுபவர்கள் மானியமற்ற விலையில் வெளிச்சந்தையில் தங்களுக்கு தேவையான சிலிண்டர்களை வாங்க வேண்டும்.
இந்நிலையில், மானிய விலையில் அரசு வழங்கும் எரிவாயு சிலிண்டரின் விலையை ஒரு ரூபாயை 93 காசுகள் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்த அடுத்த நாளே மானிய சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.