34-வது மான் கீ பாத் நிகழ்ச்சி : பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாற்றுகிறார்..!

294

பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் மனம் திறந்து பேசும் மான் கீ பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஆல் இண்டியா ரேடியோவில் ஒலிபரப்பாகிறது.
மான் கீ பாத் எனப்படும் மனம் திறந்து பேசும் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி, நாட்டுமக்களுடன் தனது எண்ணங்களை மாதந்தோறும் பகிர்ந்துகொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில், பேச வேண்டிய பிரச்சினைகள், சம்பவங்கள் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் 34-வது மான் கீ பாத் நிகழ்ச்சி இன்று காலை ஆல் இண்டியா ரேடியோவில் நேரடியாக ஒலிபரப்பாகிறது.
ஜி.எஸ்.டி., வரி, பீகார் அரசியல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பயணம், ஜி 20 மாநாடு குறித்து இன்றைய மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஒலிபரப்பான மான் கீ பாத் நிகழ்ச்சிகளில், எல்லையில் ராணுவ வீரர்களின் தியாகம், இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாகசம், மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் மேக்இன் இண்டியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், விவசாயிகள் பிரச்சினை போன்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.