மான் கீ பாத் எனப்படும் மனம் திறந்து பேசும் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

222

மான் கீ பாத் எனப்படும் மனம் திறந்து பேசும் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
மான் கீ பாத் எனப்படும் மனம் திறந்துபேசும் நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுடன் மாதம் ஒருமுறை உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆல் இண்டியா ரேடியோவில் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது. அதன்படி, 26-வது மான் கீ பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பாகிறது. காலை பதினோரு மணியில் இருந்து ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், பல்வேறு விஷயங்கள் மற்றும் கருத்துக்கள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி தமது எண்ணங்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்.
இந்நிகழ்ச்சியில் பேச வேண்டிய கருத்துக்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் டுவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார். தூய்மை திட்டம், எல்லையில் பாதுகாப்பு படையினரின் தியாகம் மற்றும் பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் குறித்து முன்னதாக ஒலிபரப்பான மான் கீ பாத்-தில் மோடி பேசியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.