லாரிகள் வேலை நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

380

லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட வேண்டியவை என்றார். லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், விரைவில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார். மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.