அரசியல் ஆதாயம் தேடும் நபர்களுக்கு பதிலடி கொடுக்க தயார் |மாபா பாண்டியராஜன்

108

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசியல் பின் புலத்திற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என அமைச்சர் மாபா பாண்டியராஜன் சவால் விடுத்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டி 3 நாட்கள் நடைபெற உள்ளன. இந்த போட்டியினை தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதலமைச்சர் மீது அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல், அரசியல் ஆதாயம் தேடும் நபர்களுக்கு பதிலடி கொடுப்போம் என சவால் விடுத்தார்.