மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் – மு.க.அழகிரி

394

திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டால், கட்சித்தலைவராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயார் என முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி தெரிவித்தார்.

சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி, செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள அமைதிப்பேரணி தொடர்பாக, மதுரையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து 7-வது நாளாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஆதரவாளர்களுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பொதுக்குழுவில் உள்ள ஆயிரத்து 500 பேர் மட்டும் திமுக அல்ல என்று கூறினார்.

உண்மையான தொண்டர்கள் அனைவரும் தன்னுடன் இருப்பதாக கூறிய மு.க.அழகிரி, செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள அமைதிப்பேரணிக்கு ஆளுங்கட்சி தரப்பில் எந்த நெருக்கடியும் இல்லை என்று தெரிவித்தார். திமுகவுடன் இணைவதற்காகவே தாங்கள் போராடுவதாக கூறிய அவர், கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள தயார் என்றால், மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று தெரிவித்தார்.