எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா : சென்னையில் கால்கோள் நடும் நிகழ்ச்சி

321

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவைவையொட்டி சென்னையில் கால்கோள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவானது தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து சென்னையில் இம்மாதம் 30ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான கால்கோல் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சென்னை வேலப்பன்சாவடியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பாவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பெஞ்சமின், காமராஜ், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.