விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை தொடரும் ஐரோப்பிய யூனியன் அமைப்பு தெரிவித்துள்ளது.

324

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை தொடரும் ஐரோப்பிய யூனியன் அமைப்பு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால் அதன் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த தடை நீங்கியதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வங்கிப் பணம் விடுவிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தொழில்நுட்ப அடிப்படையில் மட்டுமே விடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் இல்லை என ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம்
கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, விடுதலைப்புலிகள் அமைப்பு மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடை தொடரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் மாற்றம் செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் ஐரோப்பிய யூனியன் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.