நெல்லை அருகே தங்கையைக் காதலித்தவரின் சகோதரரை வெட்டிக் கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் அடுத்த காக்கநல்லூரைச் சேர்ந்த அன்புச் செல்வி என்பவரும், அதே பகுதியை சேர்ந்த மற்றொருப் பிரிவைச் சேர்ந்த முருகனும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு, அன்புச் செல்வியின் சகோதரர் மகேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அதையும் மீறி இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த மகேஷ், முருகனின் சகோதரர் குமாரை, தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிப் படுகொலை செய்தார். தகவலறிந்த போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மகேஷ், முப்புலி, கர்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.