லோதா கமிட்டியின் முக்கிய பரிந்துரைகளை நிராகரிக்கப் போவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

192

லோதா கமிட்டியின் முக்கிய பரிந்துரைகளை நிராகரிக்கப் போவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் சூதாட்ட வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி அளித்த பல்வேறு பரிந்துரைகளை செயல்படுத்தாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் தயக்கம் காட்டி வந்துள்ளது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற பி.சி.சி.ஐ யின் பொதுக்குழு கூட்டத்தில், லோதா கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட பல முக்கிய கோரிக்கைகளை நிராகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.