லாரிகள் வேலை நிறுத்தத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்..!

156

லாரிகள் வேலை நிறுத்தத்தினால் கரூரில் 60 கோடி மதிப்பிலான ஜவுளி பொருட்களும், நாமக்கல்லில் 20 கோடி மதிப்பிலான முட்டைகளும் தேக்கம் அடைந்துள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பாக லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரம்புக்குள் எரிபொருள் விலையை கொண்டுவர வேண்டும், 3ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் வேலை லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.இதனால் கரூரில், நாள் ஒன்றிற்கு 60 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பொருட்கள் தேங்கியதோடு, மூலப்பொருட்கள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ரெயில்கள் மூலம் மூலப்பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும். ஆகவே மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி நெருக்கடிகளை சரிசெய்ய வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல் லாரிகள் வேலை நிறுத்தத்தினால், நாமக்கல்லில் 20 கோடி மதிப்பிலான 8 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் கோழித்தீவனம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.