காப்பீட்டு கட்டணம் 30 சதவீதம் உயர்த்தப்பட்டதால் இன்று முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ..!

913

காப்பீட்டு கட்டணம் 30 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தி, இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து கடந்த மாதம் மத்திய அரசு மற்றும் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுடன் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஹைதராபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்தக்கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், காப்பீட்டு கட்டணம் 30 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, அபராதம் அதிகரிப்பை ஆகியவற்றை கண்டித்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.