வேலைநிறுத்தம் தொடரும் – லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

330

ஐதராபாத்தில் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வேலை நிறுத்த போரட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வு, பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று லாரிகளின் காப்பீட்டு கட்டணம் தொடர்பாக மத்திய அரசுடன், லாரி உரிமையாளர்கள் ஐதராபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகப்பா தெரிவித்தார். இந்த போராட்டம் காரணமாக தமிழகத்திற்கு வரவேண்டிய பொருட்களும், வெளி மாநிலத்திற்கு அனுப்ப வேண்டிய பொருட்களும் தேங்கி கிடக்கின்றன. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.