விசைத்தறி தொழிலாளர்களின் தொடர் போராட்டம்..!

235

விசைத்தறி தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணாக, சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி பகுதிகளில் விசைத்தறி தொழில், அங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. 7 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். விசை தறி தொழிலாளர்கள் மற்றும் விசை தறி உரிமையாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம், இதுவரை புதுப்பிக்கப்படவில்லை.
இந்தநிலையில், விசைத்தறி தொழிலாளர்கள் தரப்பில் 60 சதவீத கூலி உயர்வும், விடுமுறை சம்பளமாக 300 ரூபாய் தரக் கோரியும், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முத்தரப்பு பேச்சுவர்த்தை நடத்தியும் விசைத்தறி உரிமையாளர்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் வீடு சார்ந்த விசை தறி தொழிலாளர்கள் 38 வது நாளாக, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு அதிகாரிகள், விசை தறி தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு, விசை தறி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.